Sunday, September 7, 2008

கருவாட்டு குழம்பு

குளம் வறண்டு போக
குட்டை என்று ஆக
வசித்து வந்த
மீன்கள் வத்தல் ஆகிப் போக
மீன் குழம்பு இல்லையென்று
நான் அழுதேன் !

கருவாட்டு குழம்பு
வைத்து
கண்ணிரை துடைத்தாள்
என் அம்மா...!Monday, August 11, 2008

குரலில்லாமல் தவிக்கும்
ஊமைகளுக்கு
உன் குரலை கொடுத்துவிடலாம் ! !
உடல் மொழி
விழி மொழி
இதழ் மொழியென
எத்தனை மொழிதான்
ஒருத்தி பேசுவது ...

கொதிக்கும் எண்ணெய் சட்டியில்
கடலை மாவில் தோய்த்த
வாழைக்காய்கள்
நனையும்போது
எழும் வாசனைக்கு
சட்டைப்பை
சில்லறையை
தடவும் விரல்கள் ....

Sunday, August 3, 2008

மரப்பலகையில் அமர்ந்து
தினசரி படித்தவாறு
சாலையில் விரையும்
வாகனங்களை வெறித்தவாறு
கண்ணாடிதம்ளர்களில்
தேநீர் உறிஞ்சிக் குடிப்பது
ஆண்களுக்கு மட்டுமென
வரம் தந்தது யார் ... !

Thursday, July 31, 2008

ஓயாது
உடைகளை
உரிக்கும் எனக்கும்
உடுத்தும் உனக்கும்
கை வலி
ஏன் வரவில்லையென்று
கதறுகின்றன
மின்னல் பூக்களால் ஆன
வண்ணசேலைகள் ... !
உன் காதுகளில்
கிசு கிசுத்து ...
கை பிடித்து
அறை உள் தள்ளின
உன் அம்மா
சொல்லியவாறெல்லாம்
பயமுறுத்த போவதில்லை
நான்
எனக்குள்ளும் பயம் தான் ...!
துணை பேச வெண்ணிலவு
எண்ணுவதற்கு விண்மீன்கள்
கண்ணயர மென் சாரல்
செவிக்கு இரவு இசை
இருந்தும் இனிக்காத இரவு ! ! !
தாழிட்ட அறைக்குள்ளே
தழுவி சுகிக்கயிலே
சொர்க்கத்தின் சுவை பார்க்கும் ...

Sunday, July 27, 2008

ஒரு மழை நாளில்
உன்னோடு
நனைந்த ஞாபகம் ...
ஒவ்வொரு மழை நாளிலும்
நனைத்து விடும் என்னை....
நரை பூக்கும்
ஓர் நாளில்
நீர் பூக்கும்
விழியோடு
பழங் கதை
நீ பூக்க ....
இதழில் தேன் பூக்க
நான் கேட்டு
உன் மடி மீது
என் உயிர் நீக்க
வேண்டுமொரு
விண்மீன் பூக்கும் இரவு ......
திருவிழாவுக்கு
தேர் பார்க்க
வீட்டில் எல்லோரும்
கிளம்பி விட்ட பொழுதில்
கிடைத்த தனிமையை
உன் வெட்கம் வீணாக்கி விட்டது.....
தலை தீபாவளி
எண்ணெய் முழுக்கில்
என்னை இழுத்து
பின் முதுகை
எண்ணையாக்கி
அணைத்துக் கொண்டாய் ! ! !
ரவிக்கையில்
எண்ணெய் கறை கண்டு
என்னாச்சுடி ?
என கேட்கும்
அம்மாவிடம்
என்ன சொல்வேன் ...!
மகிழம் பூக்கள்
இறைந்து கிடக்கும்
முற்றத்தில் ....
விடிய விடிய
விளக்கு எரித்து படிக்கும்
எதிர் வீட்டு பையனுக்கு
பரீட்சை இன்றோடு முடிந்தது ! ! !
இன்றைய இரவில்
நாம் மட்டும் தன்
விழித்திருக்க போகிறோம் .........
கனமாய்
வார்த்தைகள்
சூழ்ந்து கொள்ளும்
நிமிடங்களில் ...
வார்த்தைப் பதிவுகளின்றி
உரைத்து போகும்
உன் மொழியை
எந்த மொழியோடு
வகைப் படுத்துவது .....
உன் ஈரக் கூந்தலின்
நுனிகள் சொட்டும்
நீர்த்துளிகள்
விழுந்த மண்ணில்
மழை வாசம்
ஊரெங்கும் ... ! !
மூக்கில்
விரல் நுழைத்து
அழுக்கெடுத்து
அனிச்சயாய்
நீ நுகரும் போது .....
பார்த்து விட்ட
என்னை கண்டு
உதடு கடித்த
உன் புன்னகை
புது வித அபிநயம் .....
இடம் விடாது
இரு கையும்
மருதாணி வைத்த பின்
கலையும் கூந்தலும்
நழுவும் சேலையும்
உனைத்தான்
உதவிக்கழைக்கும்
வெட்கமில்லாமல்

நாமிருவரும்
தெருவில் கை கோர்த்து
நடக்கையில்
...
எதிர்படும்
சில
பெண்களை கண்டு
முகம் குனியும்
உன் செய்கை
ஆணுக்கும்
நாணம்
உண்டென
சங்க இலக்கியம் சொல்லாதது ....
கொக்குகள் மீன் பிடிக்கும்
அரசம்பழங்கள் மிதக்கும்
குளக்கரையில்
அமர்ந்தவாறு
நான் குளிப்பதை
வேடிக்கை பார்க்கும்
உன் பார்வையில்
உயர்த்திக்கட்டின
என் பாவாடை
அவிழ்கிறது
அடிக்கடி ..........
வெளியூர் சுற்றுலாவின்
பேருந்து பயணத்தில்
மடியில் தலை வைத்து
அடி வயிற்றில்
கை வைத்த என்னை ...
குனிந்து காது கடித்து
நீ தண்டித்தது
அழகாய் இருந்தது .....
ஒற்றை நிலவு
வீசும் ஒளி......
ஓர விழியே
உந்தன் மொழி.....
கற்றை விண்மீன்
கண்ணவிழ
கட்டில் மேலே
இரவு பலி .........
தொட்டு கொள்ளாமல்
பிரித்து வைத்த
ஆடி மாதத்துக்கு தெரியாமல் ...
நாம்
தொட்டுக்கொண்டதால்
சித்திரை மாதத்தில்
நமக்கு குழ்ந்தை பிறந்தது.... ! !
கரும்பு காடுகள்
கட்டிலறை ஆவதும்...
விறகு வெட்டும் நேரங்களில்
விளையாட்டு நடப்பதும் ...
ஆற்றுக் குளியலில்
அவர் கை முதுகு தேய்ப்பதும்
எத்தனை கோடி
சுகமென எனக்கும்
அவனுக்கும் மட்டும் தான் தெரியும் ... !
ஊருக்கு போன மச்சான்
புதுச்சேலை வாங்கி வந்தான் ! !
மீன் குழம்பு ஆக்கி வச்சேன்
வயிறு முட்ட தின்னுப் புட்டான் ! !
அவன் திண்ணைல படுக்கலடி
நான் ராத்திரி தான் தூங்கலடி ...... ! ! !

கோடங்கி வந்து
குறி சொல்லும்
ராப்பொழுதில்
நமக்காக
இன்னும் கொஞ்சம்
மிச்சமிருந்தது
இரவு .... ! !
மழைக் காலத் தவளைகள்
ஈர வயல்களில்
இசைக் கச்சேரி
நடத்தும்
இரவுகளை !
பிண்ணணி இசையாய்
எடுத்துக் கொள்வோம்
பிணைதலுக்கு........! ! !
நீளக்கருங்குழல்
நீள் வட்ட மதி முகம்
கத்திக் கரு விழி
கனிந்த செவ்விதழ்
பழுத்த மாங்கனி
பனிப்புல் நூலிடை
இழைத்த வாழையின்
இழுத்த அழ்கு
இழையாய் படுக்கை
உணவாய் நீ .... ! ! !
எனக்கு முன்னே
நீ தூங்கி விட்ட
இரவுகளில்
உன்னை எழுப்ப
எத்தனை முறை
யோசித்தேன் என
எண்ணிக் கொண்டிருந்த
அந்த நிலவும்
குழம்பி போய் இருக்கும் ....!!

Saturday, July 26, 2008

உன் உடல் வெப்பத்தை
ரசித்தவாறு
உன் மார்பு சப்பி
பால் குடிக்கும்
நம் பையன்
என்னைப் போலவே குறும்பன்
என்கிறாயே
பையனுக்கு
பல் முளைத்து விட்டதா என்ன .........

Thursday, July 24, 2008

கனவுகளே ரகசியம்
எனும்போது
கனவுக்குள்
என்னடி ரகசியம் ! ! !

  • அத்தனை அழகாய்
  • உனக்கு
  • ஆடை கட்டி
  • அழகு பார்த்த
  • உன் உறவுகளை விட
  • உன்
  • ஆடை கழற்றி
  • அழகு பார்த்த
  • என்னை
  • பிடிக்கும் தானே உனக்கு ....
ரகசியம்

ரகசியம் பேச
இரவுகள் வேண்டும் ..
உரசி பேச உறவுகள் வேண்டும் !

Wednesday, July 23, 2008

விடுமுறை தினம்

தோட்ட கிணற்றில்
துணி துவைக்கும்
எனது
ஈரக் கால்களை
ரசிப்பதற்காய்
கிணறு பக்கம் வருவான்
ஞாயிறோடு
ஞாயிறும் கரையும் .....