Sunday, September 7, 2008

கருவாட்டு குழம்பு

குளம் வறண்டு போக
குட்டை என்று ஆக
வசித்து வந்த
மீன்கள் வத்தல் ஆகிப் போக
மீன் குழம்பு இல்லையென்று
நான் அழுதேன் !

கருவாட்டு குழம்பு
வைத்து
கண்ணிரை துடைத்தாள்
என் அம்மா...!



Monday, August 11, 2008

குரலில்லாமல் தவிக்கும்
ஊமைகளுக்கு
உன் குரலை கொடுத்துவிடலாம் ! !
உடல் மொழி
விழி மொழி
இதழ் மொழியென
எத்தனை மொழிதான்
ஒருத்தி பேசுவது ...

கொதிக்கும் எண்ணெய் சட்டியில்
கடலை மாவில் தோய்த்த
வாழைக்காய்கள்
நனையும்போது
எழும் வாசனைக்கு
சட்டைப்பை
சில்லறையை
தடவும் விரல்கள் ....

Sunday, August 3, 2008

மரப்பலகையில் அமர்ந்து
தினசரி படித்தவாறு
சாலையில் விரையும்
வாகனங்களை வெறித்தவாறு
கண்ணாடிதம்ளர்களில்
தேநீர் உறிஞ்சிக் குடிப்பது
ஆண்களுக்கு மட்டுமென
வரம் தந்தது யார் ... !

Thursday, July 31, 2008

ஓயாது
உடைகளை
உரிக்கும் எனக்கும்
உடுத்தும் உனக்கும்
கை வலி
ஏன் வரவில்லையென்று
கதறுகின்றன
மின்னல் பூக்களால் ஆன
வண்ணசேலைகள் ... !
உன் காதுகளில்
கிசு கிசுத்து ...
கை பிடித்து
அறை உள் தள்ளின
உன் அம்மா
சொல்லியவாறெல்லாம்
பயமுறுத்த போவதில்லை
நான்
எனக்குள்ளும் பயம் தான் ...!
துணை பேச வெண்ணிலவு
எண்ணுவதற்கு விண்மீன்கள்
கண்ணயர மென் சாரல்
செவிக்கு இரவு இசை
இருந்தும் இனிக்காத இரவு ! ! !
தாழிட்ட அறைக்குள்ளே
தழுவி சுகிக்கயிலே
சொர்க்கத்தின் சுவை பார்க்கும் ...

Sunday, July 27, 2008

ஒரு மழை நாளில்
உன்னோடு
நனைந்த ஞாபகம் ...
ஒவ்வொரு மழை நாளிலும்
நனைத்து விடும் என்னை....
நரை பூக்கும்
ஓர் நாளில்
நீர் பூக்கும்
விழியோடு
பழங் கதை
நீ பூக்க ....
இதழில் தேன் பூக்க
நான் கேட்டு
உன் மடி மீது
என் உயிர் நீக்க
வேண்டுமொரு
விண்மீன் பூக்கும் இரவு ......
திருவிழாவுக்கு
தேர் பார்க்க
வீட்டில் எல்லோரும்
கிளம்பி விட்ட பொழுதில்
கிடைத்த தனிமையை
உன் வெட்கம் வீணாக்கி விட்டது.....
தலை தீபாவளி
எண்ணெய் முழுக்கில்
என்னை இழுத்து
பின் முதுகை
எண்ணையாக்கி
அணைத்துக் கொண்டாய் ! ! !
ரவிக்கையில்
எண்ணெய் கறை கண்டு
என்னாச்சுடி ?
என கேட்கும்
அம்மாவிடம்
என்ன சொல்வேன் ...!
மகிழம் பூக்கள்
இறைந்து கிடக்கும்
முற்றத்தில் ....
விடிய விடிய
விளக்கு எரித்து படிக்கும்
எதிர் வீட்டு பையனுக்கு
பரீட்சை இன்றோடு முடிந்தது ! ! !
இன்றைய இரவில்
நாம் மட்டும் தன்
விழித்திருக்க போகிறோம் .........
கனமாய்
வார்த்தைகள்
சூழ்ந்து கொள்ளும்
நிமிடங்களில் ...
வார்த்தைப் பதிவுகளின்றி
உரைத்து போகும்
உன் மொழியை
எந்த மொழியோடு
வகைப் படுத்துவது .....
உன் ஈரக் கூந்தலின்
நுனிகள் சொட்டும்
நீர்த்துளிகள்
விழுந்த மண்ணில்
மழை வாசம்
ஊரெங்கும் ... ! !
மூக்கில்
விரல் நுழைத்து
அழுக்கெடுத்து
அனிச்சயாய்
நீ நுகரும் போது .....
பார்த்து விட்ட
என்னை கண்டு
உதடு கடித்த
உன் புன்னகை
புது வித அபிநயம் .....
இடம் விடாது
இரு கையும்
மருதாணி வைத்த பின்
கலையும் கூந்தலும்
நழுவும் சேலையும்
உனைத்தான்
உதவிக்கழைக்கும்
வெட்கமில்லாமல்

நாமிருவரும்
தெருவில் கை கோர்த்து
நடக்கையில்
...
எதிர்படும்
சில
பெண்களை கண்டு
முகம் குனியும்
உன் செய்கை
ஆணுக்கும்
நாணம்
உண்டென
சங்க இலக்கியம் சொல்லாதது ....
கொக்குகள் மீன் பிடிக்கும்
அரசம்பழங்கள் மிதக்கும்
குளக்கரையில்
அமர்ந்தவாறு
நான் குளிப்பதை
வேடிக்கை பார்க்கும்
உன் பார்வையில்
உயர்த்திக்கட்டின
என் பாவாடை
அவிழ்கிறது
அடிக்கடி ..........
வெளியூர் சுற்றுலாவின்
பேருந்து பயணத்தில்
மடியில் தலை வைத்து
அடி வயிற்றில்
கை வைத்த என்னை ...
குனிந்து காது கடித்து
நீ தண்டித்தது
அழகாய் இருந்தது .....
ஒற்றை நிலவு
வீசும் ஒளி......
ஓர விழியே
உந்தன் மொழி.....
கற்றை விண்மீன்
கண்ணவிழ
கட்டில் மேலே
இரவு பலி .........

முத்தம்

  உன் மீதான  என் அன்பு,  என் பிரியங்கள் ,  மட்டும் தான் மிகப் பெரிதென நினைத்திருந்தேன்   .  நீ உதடு அழுத்தி கொடுத்த  ஒரு முழு முத்தம் என், எ...